Ragavendra Alumni 2010

தன்னம்பிக்கை

நண்பனே…. என் இனிய இளைஞனே….
“உன்னையே நீ அறிவாய்: உன்னையே நீ அறிவாய்”
- இது கிரேக்க ஞானியின் தத்துவம்.
“உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்….
உலகத்தில் நீ வாழலாம் – இந்த உலகையே நீ ஆளலாம்”

- இது தமிழ் கவிஞனின் தத்துவப்பாட்டு….
பூட்டிய சிந்தனை கதவுகளை திறக்கும் ஓர் முயற்சி…..
தூங்குகின்றஇளைஞனை தட்டி எழுப்பும் ஓர் புரட்சி…
என் சிந்தனை களத்தல் சிதறிய இக்கவியும் ஓர் சாட்சி….
விழிக்கின்றநண்பனே…. நீ வெற்றிபெறு! அதில் தான் மகிழ்ச்சி….
நண்பனே!
“நாளைய பாரதம் நமதே” – என்றான் ஒரு கவிஞன்
நான் கூறுகின்றேன் – நாளை என்பது நமதில்லை
இன்றேஎன்பதே இளைஞனின் கையில்….
இளைஞனே நீ எழுந்திரு… விழித்திரு….
உன் வெற்றிக்கனியை பறிக்கும் வரை உழைத்திரு….
வெற்றி உனதே… வெற்றி உனதே….
ஆ…. இளைஞனே ஏன் தயங்குகின்றாய்?
எதைக்கண்டு பயந்து ஒதுங்குகின்றாய்?
எதையோ ஒன்றைதொலைத்துவிட்டு தேடுகின்றாய்
எதை நீ தேடுகின்றாய்? எங்கே தேடுகின்றாய்?
அகத்தே இருக்கும் ஒன்றை…. புறத்தே தேடுகின்றாய்…
ஏன்? ஏன் இந்த தயக்கம்?
உன்னால் முடியும்…. உன்னால் முடியும்…. உன்னாலே முடியும்
இது நான் உன்மேல் கொண்ட நம்பிக்கை…
என்னால் முடியும்… என்னால் முடியும்… என்றேநீ கூறு
அது நீ உன்மேல் கொண்ட தன்னம்பிக்கை….
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஓர் உற்றநண்பன்…
உனக்குள் உறைந்திருக்கும் ஓர் அற்புத தோழன்….
நினைவுகளை சுட்ùரிந்து…. கனவுகளை நனவாக்கும்
ஓர் மாயாஜாலக்காரன் – யார் அவன்?
உன்னிலை உணர்த்தும் ஓர் ஊன்றுகோல்
தன்னிலை மாற்றும் ஓர் தந்திரக்கோல்
மகுடங்கள் பல சேர்க்கும் மந்திரக்கோல்….
வெற்றி… வெற்றி…. வெற்றி மேல் வெற்றி…
என சூளுரைக்க நீ தாங்கும் ஓர் செங்கோல்…
அதுதான் நம்பிக்கை…. தன்னம்பிக்கை… தன்னம்பிக்கை…
முடியாது… முடியாது… என்னாலே முடியாது…
எதுவும் முடியாது…. என்பதுவோ அவநம்பிக்கை…
உன்னாலே முடியும்… உன்னாலும் முடியும்….
உன்னாலே முடியும் என்றுரைத்தால் அது நம்பிக்கை…
என்னால் முடியும்… என்னாலும் முடியும்…
எதுவும் முடியும் என்பதுதான் தன்னம்பிக்கை!

- விஞ்ஞானி திரு. அய்யப்பன், சென்னை

Share:

Like: