Ragavendra Alumni 2010
நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்தேனிக்கள்!!

இனி மொட்டை மாடியில் தூங்காதே..
போகவே மாட்டேன் என அடம்பிடிக்கிறதுநிலா!!

குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் 
உனது முத்தத்தால்நிறைவு பெறுகின்றன

உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லை என குழம்பாதே
மலர்தான் உன்னை முத்தமிட எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது,,,,

தேடினேன்
தேடினேன்
நீண்ட நாட்களாய் தேடினேன்
கிடைக்கவில்லை!

தொலைந்த இடம்
தெரியவில்லை.
தொலைத்த இடம்
தெரியவில்லை.
அட
இதயம் கூடவா
திருட்டு போகும்!

ஆனால்
அதை திருடியது அவளென்றறிந்து
என் இதயம் திரும்பக்கேட்டேன்.
மறுத்துவிட்டாள்.

சரி,
என் இதயம் தான் கிடைக்கவில்லை,
அவள் இதயமாவது கிடைக்குமென்று
தேடினேன்.
தேடினேன்.
அதுவும்,
கிடைக்கவில்லை.

அடிப்பாவி!
உனக்கு இதயமே இல்லையா!


உயிரெழுத்து நீயானாய்.
மெய்யெழுத்து நானானேன்.
இருவரும் சேர்ந்தோம்,
உயிர்மெய் எழுத்தானது நம் காதல்!
அதனால் தானோ,
ஆய்(யு)த எழுத்தாய்
உன் அப்பா!


என்னுயிர்
உன்னுயிரோடு
உறவாடி
உயிர்தருகிறது
ஓர் உயிர்க்கு.


நீ என்னிடம்
கனவிலாவது பேசுவாய் என்றுறங்கினால்
கனவு கூட கனவாகியே போனது


சிதைந்த சூரியன்
உடைந்த வெண்ணிலா
உதிர்ந்த விண்மீன்
நனைந்த மேகம்
இவை அனைத்தும்
வானில் சாத்தியமென்றால்
என் வாழ்வில்
அவளும் சாத்தியம்


ஆசிரியப்பா தெரியாது
வெண்பா தெரியாது
எதுகை மோனை தெரியாது
மொத்தத்தில் இலக்கணமே தெரியாது
இருந்தும் காதலித்துப்பார்
உனக்கும் கவிதை எழுதத்தெரியும்.


உன் கூந்தலில் குடியேற
வாய்ப்பிழந்த பூக்கள் யாவும்
தற்கொலை செய்தன
தரையில் குதித்து


ஆக்ராவில் இல்லையென்றாலும்,
என் இதயத்தில் கட்டியிருப்பதால்,
நானும்
ஷாஜஹான்.



காதல் கொண்டேன்.
கவிஞனானேன்.

ஆதரவாய் உன் தோள்சாயும் போது,
ஆறுதலாய் உதிரும் உன் வார்த்தைகளுக்காக,
என்றும் இருப்பேன்
ப்ரியமுடன்.


கஷ்டமான காலங்களில்
மனம் சிக்கித்தவிக்கும் வேளைகளில்
நான் கண்ணீர சிந்தும் நேரங்களில்
உன் புன்னகையை
பார்த்தாலே பரவசம்.


என் உயிரைக் கொல்லாமல்
உடலில் மின்சாரம் பாய்கிறது நீயென்
கன்னத்தில் முத்தமிட்டால்.


காதல் வானிலே,
வாழும் காவியம் நாம்.
நிலவாய் நீ,
ஒளியாய் நான்.


காதல் தீவிலே,
நிலமாய் நான்….
தனியாய் என்று வருந்தினேன்!
கடலாய் நீ…
அலையாய் வந்து மோதினாய்..

Picture

நீ இருக்கும் போது,
நேரம் போதவில்லை.
நீ இல்லாத போது,
நேரம் போகவில்லை!

காதல் என்ன  கெட்ட வார்த்தையா?
பரவாயில்லை,
பேசித்தான் பார்ப்போமே!


நீ சாய்வதற்கென்றே வைத்திருக்கும் என் 
தோள்களில் யார்யாரோ தூங்கிச் சாய்கிறார்கள் 
பயணத்தில்.


'நீ ரொம்ப அழகானவள்' என்று நண்பர்கள் 
சொல்வதெல்லாம் உண்மையா பொய்யா 
என்று உன் முகத்தைப் பார்த்து உறுதி செய்து 
கொள்கிற நேரம்கூட உன்னை நான் 
பார்த்ததில்லை.

பார்க்கவிட்டால்தானே உன் கண்கள்.  

Share:

Like: