Ragavendra Alumni 2010

தாழ்வு மனப்பான்மையை தகர்ப்போம்


இனிய தன்னம்பிக்கையாளர்களே!  புன்னகைத்துப் பழகியதால் பிரச்சனைகளை ஓட்டிவிடும் திறமையைப் பெறதுடித்துக் கொண்டிருப்பவர்களே, பிரச்சனைகள் வருவதற்கான காரணங்களில் தாழ்வு மனப்பான்மையும் ஒன்று. ஏனென்றால் இது நமது வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. இதை விரிவாய் சிந்திப்போம்.

தாழ்வு மனப்பான்மை (Inferiority complex)

விளக்கம் : நம் மனதின் நம்மைப்பற்றிய கற்பனையான, ஆரோக்கியமற்ற, எதிர்மறையான எண்ணங்களே தாழ்வு மனப்பான்மை. பெரும்பாலும் சிறுவயதிலிருந்தே இது தோன்றுகிறது.
அனைவருக்கும் பொதுவானது.

இதற்கு தொடக்கம் எப்போது வேண்டு மானாலும் நிகழலாம்.

இதற்கு வயது வரம்பு இல்லை.

ஏன் வருகிறது?

கல்வி, அழகு, ஆரோக்கியம், அந்தஸ்து இவற்றில் மற்றவர்களோடு ஒப்பிடுவதால்.

தன்னைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால்.

குழந்தைகளை அதிக அக்கரை காட்டி வெளி உலகம் தெரியாமல் வளர்ப்பதால்.

பயம், கோழைத்தனம்.

தன் மீது நம்பிக்கை இல்லாததால்.

வகைகள் : பொதுவாக உல்ல் தொடர்புடையது (Organ Inferiority) மனம் தொடர்புடையது (Mind Inferiority) என இருவகையாகத் தாழ்வு மனப்பான்மையைப் பிரிக்கலாம்.

உடல் தொடர்பான தாழ்வு மனப்பான்மை

உடல் உறுப்புகளில் உள்ள குறை பாடுகளால் இது உண்டாகிறது. குழந்தைப் பருவத்தில் விவரம் தெரிந்தபின் இம் மனநிலை உண்டாகிறது. இதனால், தன் குறையை நினைத்து அக்குழந்தை கவலைப்படும். கோபப்படும். மற்றவர்களுடன் பேசாமல் இருக்கும். பிறகுழந்தைகளோடு ஒப்பிட்டு தன்னால் முடியாது என முயலாமல் ஒதுங்கி விடும்.

சிறுவயதில் தோன்றும் தாழ்வு மனப்பான்மைக்கு முக்கிய காரணமாக அமைவது உடல். அக்குழந்தைகள் வளரும் வீட்டில் உள்ளவர்கள் அவ்வீட்டுக்கு வந்து செல்வோர். அவர்களை விடப் பலசாலிகள் மற்றும் தன்னையொத்த மற்ற குழந்தைகள் செய்யும் செயல்கள் ஆகியவற்றோடு ஒப்பிட்டு தனது உடலில் உள்ள ஏதோ ஒரு சிறு குறையைப் பெரிதாகப் பார்த்து “என்னால் இவர்களைப் போல் செய்ய முடியாது” என்றஎதிர்மறையான எண்ணத்தை ஆழ்மனதில் பதித்துவிடுகிறது. இவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?

சுயநலம் மிகுந்து பொது நலமற்ற நிலை

செயலைத் துவங்குமுன், தன்னால் முடியாவிட்டால்… என்றெண்ணும் நிலை.

நிஜமான வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பொருட்படுத்தாமல் நிழல் சண்டை போடும் நிலை

எதிர்மறையான வளர்ச்சியும் வாழ்க்கை முறையும் உள்ள நிலை.

மனம் தொடர்பான தாழ்வு மனப்பான்மை

மனக்குழப்பம் உள்ளவர்கள் பேசுவதற்கும் ஏதாவது செய்வதற்கும் கூட, தங்களுக் குள்ளேயே “இது முடியுமா” என சந்தேகப் பட்டு, பயந்து, இந்த மனநிலைக்கு செல்வர். தங்களிடமுள்ள திறமைகளை தாங்கள் சிறப்பாகச் செயல்பட்டதை கவனத்தில் கொள்ளாமல், பிறரது படிப்பு, புகழ் இவற்றின் முன் மனதிற்குள் கூனிக்குறுகி ஒதுங்கி விடுவர்.

தாழ்வு மனப்பான்மையை நீக்கும் பயிற்சிகள்

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு, அரவணைப்பு, பாராட்டு (Family Support)
பெற்றோர்களின் நட்பு முறையிலான கண்காணிப்பும் வழிகாட்டுதலும் (Good Parentship)

உறவினர்கள், நண்பர்களின் அரவணைப்பு (Social Support)

“நீ தைரியசாலி, புத்திசாலி, தன்னம்பிக்கையாளன்” எனத் தினமும் கூறி, இந்த எண்ணத்தை அவர்கள் மனதில் பதிய வைத்தல். இதேபோல் தானும் கூறுதல்

அதன் தொடர்ச்சியாக சுய சங்கல்பம் (Auto Suggestion) செய்து தாழ்வு மனப்பான்மையிலிருந்து மீண்டு வருதல்.

அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்து கொண்டு சந்தேகங்களைப் போக்குதல்.

தனது செயல்பாடுகளைத் தானே பாராட்டுதல்.

பெரியவர்கள் கண்காணிப்பில் சிறுசிறு சவாலான செயல்களில் ஈடுபடுதல் (Risk taking habit)

நான் தன்னம்பிக்கையாளன், எனக்கு பயம் கிடையாது. நான் சந்தோஷமாக இருக்கிறேன். அனைவரும் என்னை நேசித்து வழிகாட்டுகின்றனர்.

என நாள்தோறும் சொல்லி உடல் அணுக்களிலிருந்து தாழ்வு மனப்பான்மை எனும் உணர்வை வெளியேற்றுதல்.

Share:

Like: