Ragavendra Alumni 2010

நீங்க ஹர்ட் ஒர்க்கர்ரா? சுமார்ட் ஒர்க்கர்ரா?

   உலகம் மிக வேகமாக மாறிக்கொண்டே இருக்கிறது. நீங்களும், உங்கள் வாழ்க்கை ஸ்டைல (முறைய) மாற்றிக் கொள்ளவில்லை என்றால் மாற்றம் என்ற சுனாமி உங்களை இருந்த இடம் தெரியாமல் அழித்துவிடும்.

   பல ஆண்டுகளுக்கு முன்னர் பணம் நிறைய வைத்திருப்போர் வசதி நிறைய உடையவர் மட்டுமே முன்னேறமுடிந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் கடுமையான உழைப்பாளியாக இருந்தால் மட்டுமே முன்னேறமுடியும் என்றநிலை இருந்தது. இப்போது கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். கடுமையாக உழைக்கும் நபர்கள் எங்கேயாவது விரைவில் முன்னேற முடிகிறதா? அதே நேரத்தில் மூளைக்கு வேலை கொடுத்து, ரொம்ப அலட்டிக்காது வருமானம் ஈட்டும், ஒரு நபரைப் பாருங்கள். மடமடவென முன்னேறி இருப்பார்.

   சரி, ஹார்டு ஒர்க்னா என்ன? ஸ்மார்ட் ஒர்க்னா என்ன? என்றசந்தேகம் கேட்பவர்களுக்கு ஒரு உதாரணம். 75 நிமிட பயண நேரத்தில் சென்றடைய வேண்டிய தூரத்தை உங்கள் கார் ஓட்டுநர் 60 நிமிட நேரத்தில் சென்றடைகிறார் என்றால், அவரை பாராட்டுவீர்கள்தானே. இவர் கடின (ஹார்டு) உழைப்பாளி. ஏனெனில் ரிஸ்க் எடுத்து விரைவாக சென்றிருக்கிறார். எந்த ஒரு விபத்தும் நேராமல் கொண்டு சேர்த்துள்ளார். அதே தூரத்தை 60 நிமிடத்தில் விபத்தின்றி அடைந்து உங்கள் கார் எரிபொருளை (டீசல் அல்லது பெட்ரோல்) 2 லிட்டர் மிச்சம் வைப்பவர் தான் ஸ்மார்ட் ட்ரைவர். இப்போது கூறுங்கள் உங்களுக்கு எந்த ஓட்டுநரை பிடிக்கும்.

“ஸ்மார்ட்”டான ஓட்டுனரைத்தானே. நீங்கள் பணிபுரியும் நிறுவனமும் இதைப்போலத்தான் நீங்கள் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டுமென விரும்பும்.

ஸ்மார்ட்டாக இருக்க ஏதேனும் வழி இருக்கிறதா? இதோ சில வழிகள்…

 
 
1. நீங்கள் செய்யப்போகும் வேலையினை நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.
   2. ஒரு பணியை செய்யத் துவங்கும் முன் நன்கு சிந்தியுங்கள் (அதுதாங்க இந்த வேலையினை இன்னும் சிறப்பாக, பயனுள்ளதாக எப்படி செய்ய முடியுமென்று நினைக்கிறது)
   3. தொடர்ந்து நீங்கள் எடுத்துக்கொள்ளும் பயிற்சிகள் குறிப்பிட்ட விசயத்தில் உங்களை வல்லுனராகச் செய்யும் (தவறுகள் அனுபவத்தினை அதிகரிக்கும், அனுபவம் தவறுகளை குறைக்கும்)
   4. எதையும் அக்கறையோடு இறுதிவரை செய்வது (ஒரு கடையில் அலமாறி ஒன்றில் அடுக்கிய இரண்டு டஜன் முக க்ரீம் டப்பிகளில் விற்காத இரண்டு, கவனிப்பாரற்று தூசியுடன் இருந்தது. முதலாளி கூறினார், “அந்த இரண்டு டப்பாவை தூசி துடைத்து வை”. கடைப்பையன் கூறினான், “இரண்டுதான் சார் இருக்கட்டும்”. “அடுக்கின 24ல் விற்ற16 நான் போட்ட முதலீடு. 6 எனக்கு வரவேண்டிய லாபம் மொத்தம் 22, மீதி உள்ள இரண்டும் விற்றால்தான் உனது சம்பளம்” என்றார் முதலாளி. அடுத்த வினாடி அலமாறியில் இருந்த டப்பி துடைக்கப்பட்டு பளபளப்பானது). இறுதிவரை அக்கறையோடு செய்வது என்பது உங்களுக்கு வரவேண்டிய இலாபமாக இருக்கக்கூடும்.
   5. நீங்கள் செய்கின்ற வேலையை உங்கள் முதலாளி செய்தால் எப்படி அக்கறை யோடு செய்வார் (முதலீடு செய்தவரின்) அந்த அக்கறையோடு நீங்கள் செய்யுங்கள். உங்கள் ஸ்மார்ட் தானாகத் தெரியும்.
   6. எதையும் புன்சிரிப்புடன் செய்யுங்கள். இது நல்ல தரமான பணியை வழங்குவ துடன் செய்பவருக்கு மகிழ்வையும் கொடுக்கும், சேவை பெறுபவருக்கு ஸ்மார்ட்டான ஆளு நீங்கன்னு சொல்லும்.

Share:

Like: