Ragavendra Alumni 2010

எங்கும் வெற்றி ஏதிலும் வெற்றி

“உங்களுடைய வயது என்ன?”

எமர்சனிடம், “உங்களுடைய வயது என்ன? எனக் கேட்டார் ஒருவர்.

“முன்னூற்று அறுபது” என்றார் எமர்சன்.

“இல்லை, இல்லை, அறுபது வயது இருக்கலாம்” என்றார்.

அதற்கு எமர்சன்,

“காலண்டர் கணக்குப்படி எனக்கு அறுபது வயதுதான். ஆனால் என் அனுபவத்தின் வயது முன்னூற்று அறுபது” என்றார்.

வயதை பலவகை கோணத்தில் பார்க்கலாம்.

ஒவ்வொரு வருடமும் காலண்டர் கணக்குப்படி ஒவ்வொருவருக்கும் ஒருவயது கூடிவிடும். அது காலண்டர் வயது.

அடுத்தாக உடலியல் வயது. நமது உடலின் உறுப்புகளின் செயல்பாடு, இரத்திலுள்ள சர்க்கரை, உப்பு, கொழுப்பு, இரத்த அழுத்தம், தாதுப்பொருட்கள் போன்றவற்றின் அடிப் படையில் சொல்லப்படுவது. முப்பது வயதிலுள்ள ஒருவருக்கு இரத்தத்தில் அதிக உப்பு, அதிக சர்க்கரை, அதிக இரத்த அழுத்தம் போன்றமாற்றங்களிலிருந்தால் அவர் உடலியல் முறைப்படி ஐம்பது வயதிற்கு மேற்பட்டவராகத்தான் முதுமையுடன் செயல்பட முடியும். அதுவே ஐம்பது வயதுள்ள ஒருவருக்கு முப்பது வயதுள்ளவரின் இரசாயன மாற்றங்கள் இருந்தால் அவருடைய தோற்றமும் செயல்பாடும் முப்பது வயதிற்கேற்றஇளமையுடன் தென்படும். உடற்பயிற்சி, யோகா, சரியான உணவுமுறைமற்றும் பழக்க வழக்கங்களால் உடலியல் வயதை குறைத்து இளமையாக வைக்க முடியும்.

மூன்றாவது – அறிவின் வயது. நமது அனுபவங்களில் கற்றுக்கொள்கிறபாடங்களின் மூலம் சுயமுன்னேற்ற நூல்களின் மூலமும் நமது அறிவின் வயதை பன்மடங்கு அதிகமாக்கலாம். உதாரணத்திற்கு எழுபத்தைந்து வயது நிறைந்த ஒருவரின் அனுபவத்தை அவருடைய வாழ்க்கையின் சுயசரிதையை படித்து அறிந்து அதை செயல்படுத்தினால் நமது வயதுடன் எழுபத்தைந்தை கூட்டிக் கொள்ளலாம். இப்படி உயர்ந்த அனுபவம் கொண்ட உங்களின் கருத்தை அறிந்து அதை நடைமுறைப்படுத்தினால் நமது அறிவின் வயதை பலநூறாக உயர்த்த முடியும்.

நான்காவது – உழைப்பு வயது. ஒருவர் சராசரியாக சுமார் எட்டுமணி நேரம் உழைக்கலாம். பலர் சோம்பேறிகளாக ஓரிரு மணி நேரம்கூட உழைப்பதில்லை. இவர்களின் உழைப்பு வயது இருபது அல்லது முப்பது கூட வராது. ஆனால் காலண்டார் வயது அறுபதாக இருக்கும்.

அதுவே ஒருவர் ஒரு நாளைக்கு பதினாறு மணிநேரங்கள் உற்பத்தியை பெருக்கு மளவிற்கு (Productive work) செயல்பட்டால், இருபது ஆண்டுகள் அவ்வாறு உழைத்தால் அவருடைய காலண்டர் வயதுடன் மேலும் ஒரு மடங்கு வயதை சேர்த்து (உழைப்பு வயது) உற்பத்தி வயதை அதிகமாக்கலாம்.

ஐந்தாவது – மனநிலை வயது. ஒருவர் தன்னுடைய சிந்தனையில் சோர்வும், சலிப்பும் கொண்டு உறுதியற்றவராக இருந்தால் அவர் இளமையிலேயே முதுமை யானவராவார்.

அதுவே முதுமையிலும் உற்சாகத் துடனும் மகிழ்ச்சியுடனும் புதுமையை செயல்படுத்தினால் அவர் குழந்தை மனதைப் போன்ற இளமையானவர்.

முடிவு இதுதான் :

·          காலண்டர் வயது மாற்ற முடியாதது.

·          உடலியல் வயதை குறைத்தும்,

·          அறிவு வயதை கூட்டியும்,

·          உற்பத்தி (உழைப்பு) வயதை பெருக்கியும்

·          மனநிலை வயதை குழந்தையாகவும் மாற்றி செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

Share:

Like: